சமையல் தொழிலாளி தற்கொலை


சமையல் தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 16 Dec 2021 8:17 PM IST (Updated: 16 Dec 2021 8:17 PM IST)
t-max-icont-min-icon

சமையல் தொழிலாளி தற்கொலை

கணபதி

கோவை கணபதி கணேஷ் லே -அவுட் 3-வது வீதியை சேர்ந்தவர் கண்ணன்(வயது 52). சமையல் தொழிலாளி. இவர் சம்பவத்தன்று குடிபோதையில் கணபதி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து காயம் அடைந்தார். இதை அறிந்த அவரது மனைவி உடனடியாக அங்கு சென்று அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்றார். ஆனால் கண்ணன் வர மறுத்து வாக்குவாதம் செய்தார். இதனால் அவரது மனைவி அங்கிருந்து கோபித்துக்கொண்டு வீடு திரும்பி விட்டார். 

அதன்பின்னர் சிறிது நேரம் கழித்து கண்ணன் வீடு திரும்பினார். தொடர்ந்து தனது அறைக்கு சென்ற அவர்,திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story