அவ்வையார் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு


அவ்வையார் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு
x
தினத்தந்தி 17 Dec 2021 5:17 PM IST (Updated: 17 Dec 2021 5:17 PM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு, சமூக நலத்துறையின் சார்பில் 2021-2022-ம் ஆண்டில் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்தவருக்கு அவ்வையார் விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக மகளிர் தினமான 8.3.2022 அன்று வழங்க உள்ளார்.

இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

மேலும் சமூக நலனை சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து செயலாற்றுபவர்களாக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பத்தாரர்கள் சேவை பற்றிய செயல்முறை விளக்க புகைப்படம், தேசிய மற்றும் உலகளாவிய விருதுகளின் புகைப்படம், சேவை பாராட்டி பத்திரிகைகளில் வெளியான செய்தி தொகுப்பு, சேவை ஆற்றியதற்கான விரிவான அறிக்கை மற்றும் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள் ஏதும் இல்லை என்பதற்கான சான்றுடன் வரும் 17-ந்தேதிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், செங்கல்பட்டு என்ற முகவரியில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்தது.


Next Story