சிங்கப்பெருமாள் கோவிலில் அரசு மருந்தகம்


சிங்கப்பெருமாள் கோவிலில் அரசு மருந்தகம்
x
தினத்தந்தி 17 Dec 2021 5:52 PM IST (Updated: 17 Dec 2021 5:52 PM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் நகர கூட்டுறவு கடன் சங்கத்தில் கூட்டுறவு மருந்தகம் திறப்பு விழா நடைபெற்றது.

இதற்கு மாவட்ட இணைபதிவாளர் லட்சுமி தலைமை தாங்கினார். துணைபதிவாளர் சுடர்விழி முன்னிலை வகித்தார். செயலாளர் செண்பகவள்ளி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ, வருவாய் ஆர்.டி.ஓ. சகிதா பர்வின் ஆகியோர் கலந்துக் கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து மருந்தகத்தை திறந்து வைத்தார். பின்னர் ரூ.25 லட்சத்தில் மகளிர் சுயஉதவிக்குழு கடன், பயிர் கடன், நகைக்கடன், மாற்றுத்திறனாளி கடன், வீட்டு அடமான கடன்களை வழங்கினார். 

விழாவில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கார்த்திக், மாவட்ட கவுன்சிலர் பூங்கோதை ராஜன், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் கே.ஆர்.சி.ஜெ.ரத்திஷ். மகளிர் அணி அமைப்பாளர் கலாவதி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கதிரவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story