300 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்


300 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
x
300 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
தினத்தந்தி 17 Dec 2021 9:28 PM IST (Updated: 17 Dec 2021 9:28 PM IST)
t-max-icont-min-icon

300 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

கோவை

கோவை சிங்காநல்லூர் அருகே இருகூர் பகுதியில் போலீசார் நேற்று மதியம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட சரக்கு வாகனம் ஒன்றில் இருந்து தமிழக பதிவு எண் கொண்ட சரக்கு வாகனத்தில் பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்தனர்.

 இதைப் பார்த்த போலீசார் அங்கிருந்த 2 பேரிடம் விசாரித்தனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து  நடத்திய விசாரணையில், அவர்கள் கோவை கணபதியை சேர்ந்த வாசுதேவன் (வயது 65), ராஜன் என்பதும், பெங்களூருவில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. 

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 சரக்கு வாகனங்கள் மற்றும் 300 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


Next Story