சேதம் அடைந்த தரைப்பாலம் தற்காலிகமாக சீரமைப்பு
குமாரபாளையத்தில் சேதம் அடைந்த தரைப்பாலம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. போக்குவரத்து மீண்டும் தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
சுல்தான்பேட்டை
குமாரபாளையத்தில் சேதம் அடைந்த தரைப்பாலம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. போக்குவரத்து மீண்டும் தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
தரைப்பாலம் சேதம்
சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட எஸ்.குமாரபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட குமாரபாளையம் கிராமத்தில் இருந்து செல்லியகவுண்டன்புதூர் வழியாக வடவேடம்பட்டிக்கு சாலை செல்கிறது. இந்த சாலையில் தரைப்பாலம் கட்டப்பட்டு இருந்தது.
இதற்கிடையில் கடந்த 2 வாரத்துக்கு முன்பு பெய்த பலத்த மழை காரணமாக அந்த தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. மேலும் பாலமும், அதில் உள்ள சாலையும் சேதம் அடைந்தது. இதனால் அந்த வழியாக வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அந்த வழியாக சென்று வர மாணவ-மாணவிகள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர்.
போக்குவரத்து தொடங்கியது
எனவே தரைப்பாலம் மற்றும் சாலையை சீரமைத்து, வாகன போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்று ஒன்றிய அதிகாரிகள் சாய்ராஜ் சுப்பிரமணியம், கண்ணையன், சேதுராமன் ஆகியோர் அடங்கிய குழுவினர் தண்ணீரில் மூழ்கிய தரைப்பாலத்தை ஆய்வு செய்தனர்.
இதையடுத்து ஒன்றிய பொது நிதியில் ரூ.4 லட்சம் ஒதுக்கி அந்த பாலம் மற்றும் சாலையை தற்காலிகமாக சீரமைக்க நடவடிக்கை எடுத்தனர். அதன்படி பெரிய சிமெண்டு குழாய்கள் போடப்பட்டு, மண் கொட்டி தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அந்த வழியாக மீண்டும் வாகன போக்குவரத்து தொடங்கியது. இதனால் மாணவ-மாணவிகள் உள்பட அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
Related Tags :
Next Story