டெங்கு தடுப்பு பணி தீவிரம்


டெங்கு தடுப்பு பணி தீவிரம்
x
தினத்தந்தி 17 Dec 2021 10:20 PM IST (Updated: 17 Dec 2021 10:20 PM IST)
t-max-icont-min-icon

வடசித்தூர் பகுதியில் டெங்கு தடுப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நெகமம்

வடசித்தூர் பகுதியில் டெங்கு தடுப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

டெங்கு தடுப்பு பணி

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஒன்றியத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வடசித்தூர் பகுதியில் டெங்கு தடுப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. 

வீடு வீடாக சென்று கொசு மருந்து அடித்தல், கிருமி நாசினி தெளித்தல், தேங்கி நிற்கும் தண்ணீரை அப்புறப்படுத்துதல் போன்ற பணியில் சுகாதார ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, பல்வேறு அறிவுரைகள் வழங்கப்படுகிறது.

தேங்கி கிடக்கும் மழைநீர்

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
வடசித்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக ஆங்காங்கே மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் டெங்கு கொசுப்புழு உருவாகும் அபாயம் உள்ளது.

இந்த கொசுக்கள் பகலில் மட்டுமே கடிக்கும். மேலும் நல்ல தண்ணீரில் முட்டையிடும். வளர்ந்த பிறகு டெங்கு, ஜிகா வைரஸ் பரப்பும் கொசுக்களாக மாறிவிடும். எனவே தண்ணீர் தொட்டிகளை வாரம் ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும். தேவையில்லாத இடங்களில் தேங்கிய உள்ள தண்ணீரை அகற்ற வேண்டும். கிருமி நாசினியை பயன்படுத்த வேண்டும். 

கொசு மருந்து

கிடப்பில் போடப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் சிரட்டை, பழைய டயர், ஆட்டுக்கல் போன்றவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடசித்தூர், செல்லப்பகவுண்டன்புதூர், சமத்துவபுரம், மேட்டுக்கடை ஆகிய பகுதியில் கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story