விண்வெளிக்கு இந்தியர்கள் செல்ல வாய்ப்பு
விண்வெளிக்கு இந்தியர்கள் செல்ல வாய்ப்பு உள்ளது என்று மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.
கிணத்துக்கடவு
விண்வெளிக்கு இந்தியர்கள் செல்ல வாய்ப்பு உள்ளது என்று மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.
குளத்தை ஆய்வு
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்ற துணைத்தலைவரும், சந்திரயான் திட்ட முன்னாள் இயக்குனருமான மயில்சாமி அண்ணாதுரை, கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி கிராமத்துக்கு தனது குடும்பத்தினருடன் வந்தார். பின்னர் அங்குள்ள குளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பி.ஏ.பி. வாய்க்கால் தண்ணீர் சேரமாவதால் 11.74 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அந்த குளத்தில் தற்போது 9 மில்லியன் கன அடி தண்ணீர் நிரம்பி உள்ளது. இதை கண்டு மகிழ்ச்சி அடைந்த அவர் மலர் தூவி வணங்கினார். அவரை கிணத்துக்கடவு தாசில்தார் சசிரேகா மற்றும் பொதுமக்கள் வரவேற்றனர்.
விண்வெளி செல்ல வாய்ப்பு
அதன்பிறகு மயில்சாமி அண்ணாதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-
மனிதனுக்கு நோய் தாக்குகிறது என்றால், அது வராமல் தடுப்பது எப்படி என்பது ஒரு வழிமுறை. மற்றொரு வழிமுறை, அந்த நோய் தாக்கியபிறகு அதில் இருந்து எப்படி மீள்வது என்பது ஆகும்.
அதேபோன்றுதான் தண்ணீர் மாசுபடாமல் பாதுகாப்பதும், மாசுபட்ட தண்ணீரை சுத்திகரித்து பயன்படுத்துவதும் ஆகும். முதலில் நிலவை ஆராய்ச்சி செய்தோம். அடுத்ததாக சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா செயற்கைகோள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் இருந்து விண்வெளிக்கு மனிதர்கள் செல்ல வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story