அரசு பள்ளி மாணவர்கள் 4 பேருக்கு கொரோனா
அரசு பள்ளி மாணவர்கள் 4 பேருக்கு கொரோனா
நெகமம்
நெகமம் அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் உள்ள 760 மாணவ-மாணவிகளுக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில் பரிசோதனை முடிவில் 4 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த மாணவர்கள் 4 பேரும் சிகிச்சைக்கான ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு சுத்தம் செய்யும் பணி நடந்ததோடு, கிருமிநாசினியும் தெளிக்கப்பட்டது.
பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது பெற்றோர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story