கல்லூரி மாணவா்களுக்கு விழிப்புணர்வு போட்டி
கல்லூரி மாணவா்களுக்கு விழிப்புணர்வு போட்டி
வால்பாறை
ஜனவரி மாதம் 25-ந்தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது. இதற்காக வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவின் பேரில் முன்கூட்டியே மாணவ, மாணவிகளை தயார் செய்து அவர்கள் மூலம் பொது மக்களுக்கு கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. ஒவியம், கட்டுரை, வினாடி வினா, தேர்தல் வாக்கியங்கள் எழுதுதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். வால்பாறை தாசில்தாரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான குமார் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் செல்வமுத்துக்குமாரசாமி தலைமை தாங்கி போட்டிகளை தொடங்கி வைத்து பேசினார். அப்போது, தேசிய வாக்காளர் தினத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், துண்டு பிரசுரம் விநியோகம், விழிப்புணர்வு பேரணி, விழிப்புணர்வு பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு திட்டமிட்டு கல்லூரி பேராசிரியர்கள் மூலம் மாணவ, மாணவிகளை தயார் செய்து வருகிறோம் என்றார்.
இதற்கான ஏற்பாடுகளை வால்பாறை வட்டார வாக்கு சாவடிகள் நிலைய அலுவலர் இளங்கோ, கல்லூரியின் அனைத்து துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story