குடியிருப்பு நிர்வாகிகள் மீது தாக்குதல்
குடியிருப்பு நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சரவணம்பட்டி,
கோவை சரவணம்பட்டி விநாயகபுரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காளப்பட்டியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் 2 அறைகள் எடுத்து தங்கி இருந்தார். அவர், பெண்களை வைத்து விபசாரம் செய்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று சிவக்குமாரை தேடி, கேரள பதிவு எண் கொண்ட 2 கார்களில் 6 பேர் வந்தனர். அப்போது சிவக்குமார் பற்றி கேட்டு அடுக்குமாடி குடியிருப்பு மேலாளர் சுரேஷ்குமார், பொறுப்பாளர் ஹரிஹரன் ஆகியோரை சரமாரியாக தாக்கினர்.
மேலும், அங்கிருந்த 4 செல்போன்கள், 2 லேப்டாப்கள் ஆகியவற்றை திருடி விட்டு தப்பிச்சென்றனர். இது குறித்த புகாரின் பேரில், சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story