அய்யப்ப சுவாமி கோவிலில் மண்டல பூஜை
அய்யப்ப சுவாமி கோவிலில் மண்டல பூஜை
வால்பாறை
வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் அமைந்துள்ள அய்யப்ப சுவாமி கோவிலின் 35 -ம் ஆண்டு மண்டல பூஜை திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதனை முன்னிட்டு கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள் உற்சவர் புறப்பாடு ஆகியவை நடைபெற்றது. நேற்று மாலை 4 மணிக்கு 108 கலச பூஜை, தீபாராதனை வழிபாடு நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், சிறப்பு பூஜை வழிபாடுகள் நடத்தப்பட்டு காலை 11 மணிக்கு புஷ்பாஞ்சலி ஆராதனை நடைபெறுகிறது. இதனையடுத்து கோவில் வளாகத்தில் அன்னதானம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story