செடி, கொடிகள் வளர்ந்து சேதமடைந்து காணப்படும் பயணிகள் நிழலகம்

செடி, கொடிகள் வளர்ந்து சேதமடைந்து காணப்படும் பயணிகள் நிழலகம்
x
தினத்தந்தி 19 Dec 2021 9:47 PM IST (Updated: 19 Dec 2021 9:47 PM IST)
t-max-icont-min-icon

நாகை கலெக்டர் அலுவலகம் எதிரில் செடி, கொடிகள் வளர்ந்து சேதமடைந்து காணப்படும் பயணிகள் நிழலகம் சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

வெளிப்பாளையம்:
நாகை கலெக்டர் அலுவலகம் எதிரில் செடி, கொடிகள் வளர்ந்து சேதமடைந்து காணப்படும் பயணிகள் நிழலகம் சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
சேதமடைந்த பயணிகள் நிழலகம்
நாகை - நாகூர் சாலையில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் நிழலகம் உள்ளது. இதில் பல நிழலகம் சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக நாகை கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள பயணிகள் நிழலகம் சேதமடைந்து மேற்கூரையில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. 
மேற்கூரை சேதமடைந்துள்ளதால் இங்கிருந்து பஸ் ஏறி செல்லும் பயணிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும் மழை காலங்களில் ஒழுகுவதால் பொதுமக்கள் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் இங்கு நின்று பஸ் ஏற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
சீரமைக்க வேண்டும்
அதேபோல அரசு தொழில் பயிற்சி நிலையம் அருகில் உள்ள பயணிகள் நிழலகமும் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி சேதமடைந்துள்ள பயணிகள் நிழலகத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story