கரடி தாக்கி மாணவன் படுகாயம்


கரடி தாக்கி மாணவன் படுகாயம்
x
தினத்தந்தி 19 Dec 2021 9:52 PM IST (Updated: 19 Dec 2021 9:52 PM IST)
t-max-icont-min-icon

கரடி தாக்கி மாணவன் படுகாயம்

வால்பாறை

வால்பாறையில் உள்ள சோலையார் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவன் ராகுல் (வயது 16). இவர் தனது அத்தையான விஜயலட்சுமி வீட்டிலிருந்து  வால்பாறை அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 10.45 மணிக்கு தனது வீட்டுக்கு வெளியே உள்ள கழிப்பிடத்திற்கு  ராகுல் சென்றுள்ளார். அப்போது கழிப்பிடத்திற்கு அருகில் உள்ள புதர் செடிக்குள் பதுங்கி இருந்த கரடி ஒன்று, ராகுல் மீது பாய்ந்து அவரை தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டு கத்தினார். சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஒடி வந்துள்ளனர். இதைப் பார்த்த கரடி ராகுலை விட்டு விட்டு அங்கிருந்து ஓடிவிட்டது. 

 இது குறித்து எஸ்டேட் தொழிலாளர்கள் மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்து விட்டு, கரடி தாக்கியதால் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ராகுலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்து ராகுலுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் சம்பவம் நடந்த சோலையார் எஸ்டேட் முதல் பிரிவு பகுதிக்கு சென்று கரடி நடமாடிய இடத்தில் வனப் பணியாளர்களுடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றார். மாணவனை கரடி தாக்கிய சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story