சேரிபாளையம் அரசு பள்ளியில் மேலும் 2 மாணவர்களுக்கு கொரோனா
சேரிபாளையம் அரசு பள்ளியில் மேலும் 2 மாணவர்களுக்கு கொரோனா
நெகமம்
நெகமம் அருகே சேரிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 760 மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 4 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மட்டும் விடுமுறை விடப்பட்டது. மேலும், பள்ளிக்கூடம் சுத்தம் செய்யப்பட்டதோடு, கிருமி நாசினி மருந்து அடிக்ககப்பட்டது. இந்தநிலையில் நேற்று மேலும் 2 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டு உள்ளது.
மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் பெற்றோர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story