நர்சிங் மாணவியை ஏமாற்றி காதலித்த வாலிபர்
நர்சிங் மாணவியை ஏமாற்றி காதலித்த வாலிபர்
கோவை
கோவை மாவட்டம்அன்னூரை சேர்ந்த 21 வயது மாணவி கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டது. இதைத்தொடர்ந்து மாணவி தன்னுடைய சொந்த ஊருக்கு சென்றார். இந்த நிலையில் மாணவி அங்குள்ள மில்லில் தற்காலிகமாக வேலைக்கு சேர்ந்துள்ளார். மில்லில் வேலை பார்த்த விஜூ (வயது30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
நாளடைவில் காதலாக மாறியது. விஜூ ஏற்கனவே திருமண மானதை மறைத்து மாணவியுடன் பழகி வந்துள்ளார். விஜூவுக்கு திருமணமான விஷயம் பின்னர்தான் மாணவிக்கு தெரியவந்தது. இந்த நிலையில் மாணவி அவரை சந்திக்க மறுத்ததால் மாணவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து மாணவி ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story