கோவையில் பாதுகாப்பு அதிகரிப்பு
கோவையில் பாதுகாப்பு அதிகரிப்பு
கோவை
கேரள மாநிலம் ஆலப்புழாவில் எஸ்.டி.பி.ஐ. கட்சி பிரமுகர் கே.எஸ்.ஷான் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை நடைபெற்ற சில மணிநேரம் கழித்து பாரதீய ஜனதா பிரமுகர் ரஞ்சித் சீனிவாசன் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த 2 கொலைகளால் கேரளாவில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த கொலையை கண்டித்து கேரளாவில் போராட்டங்கள் நடைபெறுவதுடன், சமூகவலைத்தளங்களிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
கேரளாவில் நடைபெற்ற கொலைகளால் கோவையில் பதற்றம் ஏற்படுவதை தடுக்க போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார் உத்தரவின்பேரில் நகரில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முக்கிய வழிபாட்டு தலங்கள், கோவில்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், போராட்டங்கள் நடத்த அனுமதிக்கப்படவில்லை என்றும் போராட்டம் நடத்துபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story