பள்ளி வகுப்பறை கட்டிடங்களின் உறுதித்தன்மை ஆய்வு


பள்ளி வகுப்பறை கட்டிடங்களின் உறுதித்தன்மை ஆய்வு
x
தினத்தந்தி 20 Dec 2021 7:55 PM IST (Updated: 20 Dec 2021 7:55 PM IST)
t-max-icont-min-icon

பள்ளி வகுப்பறை கட்டிடங்களின் உறுதித்தன்மை ஆய்வு


கோவை

மாநகராட்சி பள்ளி கட்டிடங்களின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் என்று என்ஜினீயர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர்  உத்தரவிட்டார்.

பள்ளி கட்டிடங்களில் ஆய்வு

நெல்லையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளி கட்டிட கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியானார்கள். 

இதையடுத்து தமிழகம் முழுவதும் பள்ளி கட்டிடங்களின் தரத்தை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, வடக்கு மண்டலம் 47-வது வார்டு கணேஷ் நகரில் உள்ள மாநகராட்சி பள்ளியின் கட்டிடங்களை பார்வையிட்டு உறுதித்தன்மையை ஆய்வு செய்தார். 

அப்போது சில வகுப்பறை கட்டிடத்தில் செடிகள் முளைத்து இருந்தன. அதை உடனே அகற்ற உத்தரவிட்டார். 

மேலும் அந்த பள்ளியின் கட்டிடத்தின் உறுதித்தன்மை மற்றும் தரம் குறித்து மாநகராட்சி என்ஜினீயர்கள், ஆசிரியர்களிடம் ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா கேட்டறிந்தார்.

உறுதித்தன்மை ஆய்வு

மாநகராட்சி பள்ளிகளில் தரமற்ற கட்டிடங்கள் உள்ளதா? என்பதை என்ஜினீயர்கள் ஆய்வு செய்து கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்த பட்டியலை விரைவில் வழங்க வேண்டும் என்று ஆணையாளர் உத்தரவிட்டார்.

பின்னர் அவர், சின்னவேடம்பட்டியில் நடைபெற்ற தூய்மை பணிகளை ஆய்வு செய்தார். அதோடு அவர், கொசு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்த சுகாதார பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

அபராதம்

குப்பைகளை சாலைகளில் கொட்டாமல், குப்பைத்தொட்டிகளில் மட்டுமே பொதுமக்கள் போட வேண்டும். 

மீறினால் மாநகராட்சி அலுவலர்களால் அபராதம் விதிக்கப்படும் என்றும் மாநகராட்சி ஆணையாளர் எச்சரித்தார். 

அவர், அத்திப்பாளையம் ரோடு சின்ன வேடம்பட்டியில் ரூ.20 லட்சத்தில் அமைக்கப்பட்ட தார் சாலையின் தரத்தை ஆய்வு செய்தார்.


Next Story