தலையில் சுத்தியலால் அடித்து முதியவர் கொலை


தலையில் சுத்தியலால் அடித்து முதியவர் கொலை
x
தினத்தந்தி 20 Dec 2021 8:05 PM IST (Updated: 20 Dec 2021 8:05 PM IST)
t-max-icont-min-icon

தலையில் சுத்தியலால் அடித்து முதியவர் கொலை



அன்னூர்

மது குடிக்க பணம் தராததால் தலையில் சுத்தியலால் அடித்து முதியவரை கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தொழிலாளி

கோவை மாவட்டம் அன்னூர் ஊராட்சி ஒன்றியம் மேட்டுப்பாளை யம் ஊராட்சி ஜே.ஜே. நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது65). 
இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் 2-வது மகன் குமாருக்கு (40) குடிப்பழக்கம் உள்ளது. 

இதற்கிடையே குமாரின் மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் அவர், தனது தந்தையுடன் வசித்து வந்தார். கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வரும் குமார், ராமசாமியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தார். 

சுத்தியலால் அடித்து கொலை

சம்பவத்தன்று மது குடிக்க குமார் பணம் கேட்டார். ஆனால் ராமசாமி பணம் தர மறுத்து விட்டார். 

இதனால் ஆத்திரம் அடைந்த குமார், தந்தை என்றும் பாராமல் ராமசாமியின் தலையில் சுத்தியால் ஓங்கி அடித்துள்ளார். 

இதில் பலத்த காயம் அடைந்த ராமசாமி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்த தகவல் அறிந்த அன்னூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராமசாமியின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது குறித்து அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குமாரை கைது செய்தனர்.


Next Story