வடமாநில தொழிலாளர்களுக்கு தடுப்பூசி


வடமாநில தொழிலாளர்களுக்கு தடுப்பூசி
x
தினத்தந்தி 20 Dec 2021 9:57 PM IST (Updated: 20 Dec 2021 9:57 PM IST)
t-max-icont-min-icon

வடமாநில தொழிலாளர்களுக்கு தடுப்பூசி

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் வாரப்பட்டி, வதம்பச்சேரி, செஞ்சேரிப்புத்தூர், ஜல்லிபட்டி, பூராண்டாம்பாளையம், ஜே.கிருஷ்ணாபுரம், பாப்பம்பட்டி, கள்ளப்பாளையம், எஸ்.குமாரபாளையம், தாளக்கரை உள்பட மொத்தம் 20 ஊராட்சிகள் உள்ளன. இங்கு சுமார் ஒரு லட்சம் பேர் வரை வசித்து வருகின்றனர்.

இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக ஒன்றியத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினரால் முகாம்கள் அமைத்தும், வீடு, வீடாக சென்றும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நேற்று பச்சாக்கவுண்டம்பாளையத்தில் 25 பேருக்கும், நகர களந்தையில் உள்ள ஒரு தென்னைநார் தொழிற்சாலையில் 50 வடமாநில தொழிலாளர்களுக்கும் என மொத்தம் 75 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. 

இதற்கான பணியில் டாக்டர்கள் சுந்தர், சபரிராம் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வனிதா, சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.

1 More update

Next Story