எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்


எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Dec 2021 9:57 PM IST (Updated: 20 Dec 2021 9:57 PM IST)
t-max-icont-min-icon

எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி

கேரளாவில் எஸ்.டி.பி.ஐ. மாநில செயலாளர் கே.எஸ்.ஷான் படுகொலை செய்யப்பட்டார். இதை கண்டித்தும், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கக்கோரியும் கோவை தெற்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதற்கு பொதுச்செயலாளர் இக்பால் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், கே.எஸ்.ஷான் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், அரசியல் கொலைகளை தடுக்கக்கோரியும் கோஷங்களை எழுப்பினர். இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story