சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு


சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
x
தினத்தந்தி 20 Dec 2021 9:57 PM IST (Updated: 20 Dec 2021 9:57 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் குளிர் பனிக்காலம் தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.

வால்பாறை

வால்பாறையில் குளிர் பனிக்காலம் தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.

குளிர் பனிக்காலம்

வால்பாறையின் முக்கிய பருவகாலமான குளிர் பனிக்காலம் கடந்த மாத இறுதி வாரத்தில் தொடங்கியது. ஆனாலும் ஒரு சில சமயத்தில் மழை பெய்து கொண்டு இருந்தது. 

இதனால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து இருந்தது. இந்த நிலையில் தற்போது வால்பாறையில் பகலில் கடுமையான வெயில் அடிக்கிறது. அவ்வப்போது பனி மூட்டமும், குளிரும் வாட்டுகிறது. இதனால் வால்பாறையில் இதமான காலநிலை நிலவுகிறது.

வருகை அதிகரிப்பு 

இதை அனுபவிக்க வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. வார விடுமுறை நாட்கள் மட்டுமின்றி வார நாட்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை கணிசமாக அதிகரித்து உள்ளது.  வால்பாறையில் உள்ள தங்கும் விடுதிகள், காட்டேஜ்கள் போன்றவற்றில் அறைகள் நிரம்பி வழிகின்றன. மேலும் வியாபாரமும் களைகட்டி வருகிறது. இதனால் அனைத்து தொழில் தரப்பினரும் பயன் அடைந்து வருகின்றன. 

காட்டுயானைகள்

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் சோலையாறு அணை உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் பனிமூட்டத்துக்கு நடுவே இயற்கை அழகை கண்டு ரசித்து செல்கின்றனர். 

இதற்கிடையில் மழை பெய்து வந்தபோது எஸ்டேட் பகுதிகளில் அதிகளவில் காட்டுயானைகள் முகாமிட்டு இருந்தன. தற்போது வெயில் வாட்டி வருவதால், வனப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை தேடி காட்டுயானைகள் செல்ல தொடங்கிவிட்டன. இதனால் எஸ்டேட் பகுதி மக்கள் சற்று நிம்மதி அடைந்து உள்ளனர்.


Next Story