சென்னிமலையில் விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது
ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் கூலி உயர்வு அளிக்க கோரி சென்னிமலையில் விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் கூலி உயர்வு அளிக்க கோரி சென்னிமலையில் விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜவுளி உற்பத்தி
சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான விசைத்தறி கூடங்கள் இயங்கி வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான ஆண், பெண் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். சென்னிமலை பகுதியில் சுமார் 2 ஆயிரம் விசைத்தறிகளுக்கு மட்டும் சொந்தமாக நூல் எடுத்து உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
மற்ற விசைத்தறியாளர்கள் அடைப்பு தறி என்ற வகையில் துணிகளை உற்பத்தி செய்து வருகின்றனர். அடைப்பு தறி என்பது பெரிய ஜவுளி உற்பத்தி நிறுவனத்திடம் இருந்து நூல் பெற்று அவர்களுக்கு கூலி அடிப்படையில் ஜவுளிகள் உற்பத்தி செய்து கொடுப்பது ஆகும்.
விசைத்தறி உரிமையாளர்கள்
இந்த அடைப்பு தறி விசைத்தறி உரிமையாளர்களுக்கு ஜவுளி உற்பத்தி நிறுவன முதலாளிகள் கடந்த சில ஆண்டுகளாக கூலி உயர்வு வழங்காமல் வந்துள்ளனர். மேலும் கொடுக்கப்பட்டு வந்த கூலிகளையும் விற்பனை இல்லை என குறைத்துள்ளனர்.
அடைப்பு தறி உரிமையாளர்கள் அனைத்து தொழிற்சங்க கூட்டு குழுவின் பேச்சு வார்த்தை ஒப்பந்தப்படி விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு கொடுத்து வருகின்றனர். ஆனால் ஜவுளி உற்பத்தி நிறுவன முதலாளிகள் தங்களுக்கு கூலி உயர்வு வழங்காததால் விசைத்தறி உரிமையாளர்கள் தொழிலாளர்களுக்கு கூலியை உயர்த்தி வழங்க முடியவில்லை.
வேலைநிறுத்தம்
இந்த நிலையில் அடைப்பு தறி உரிமையாளர்கள் எங்களால் தொடர்ந்து ஜவுளி உற்பத்தியில் ஈடுபட முடியவில்லை. எனவே தற்போது வழங்கும் கூலியில் இருந்து குறைந்தபட்சம் 20 சதவீதம் கூலி உயர்வு வழங்க வேண்டும் என கடந்த 15-ந் தேதி முறையாக ஜவுளி உற்பத்தி நிறுவன முதலாளிகளுக்கு நோட்டீஸ் கொடுத்தனர். மேலும் இதுசம்பந்்தமாக 2 முறை பேச்சு வார்த்தை நடத்தியும் கூலி உயர்வு வழங்கவில்லை.
இதனால், நேற்று முதல் விசைத்தறி உரிமையாளர்கள் ஜவுளி உற்பத்தி நிறுத்தம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சென்னிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஆண், பெண் தொழிலாளர்கள் வேலை இழந்து வருகின்றனர்.
மேலும் விசைத்தறி உரிமையாளர்கள் மற்ற விசைத்தறி உரிமையாளர்களிடம் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு கேட்டனர்.
Related Tags :
Next Story