வனவிலங்குகள் வேடமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய அரசு பள்ளி மாணவர்கள்
வனவிலங்குகள் வேடமிட்டு அரசு பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினாா்கள்.
ஈரோடு அருகே உள்ள நாதகவுண்டன்பாளையம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கூடம் உள்ளது. இங்கு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் லக்காபுரம் அரசு மேல்நிலைபள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவ-மாணவிகள் வன விலங்குகள் வேடமிட்டு விழிப்புணர்வு நாடகம் நடத்தினார்கள். வனவிலங்குகளை நேசிப்போம் -பாதுகாப்போம் என்ற தலைப்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகள் பல்வேறு வன விலங்குகளின் வேடத்திலும், மரம் வேடத்திலும் நடித்தனர். பார்வையாளர்கள் சிரிக்கவும், சிந்திக்கவும் கூடிய வகையில் தங்கள் நடிப்பாற்றல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
இந்த கலைக்குழுவினை லக்காபுரம் பள்ளிக்கூட ஓவிய ஆசிரியர் சிவக்குமார் ஒருங்கிணைந்து, மாணவ-மாணவிகளுக்கு பயிற்சிகள் அளித்து அழைத்து வந்தார். அவர் கூறும்போது, நாட்டுப்புற கலைகளை ஊக்கப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதை பின்பற்றி, கிராமிய கலைகளை மீட்டு எடுக்கவும், மாணவ-மாணவிகள் அதைப்பற்றி தெரிந்து கொள்ளவும், தங்கள் ஆற்றல் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முயற்சி செய்கிறோம் என்றார்.
முன்னதாக பள்ளிக்கூட தலைமை ஆசிரியை சாருலதா தலைமை தாங்கி வரவேற்றார். முடிவில் ஆசிரியர் தாமஸ் ஆண்டனி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story