வெளிநாட்டில் வேலை போலி விசாவில் அனுப்பிய நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார்


வெளிநாட்டில் வேலை போலி விசாவில் அனுப்பிய நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார்
x
தினத்தந்தி 23 Dec 2021 5:37 PM IST (Updated: 23 Dec 2021 5:37 PM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டில் வேலை போலி விசாவில் அனுப்பிய நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் மனுவை கொடுத்தனர்.

தென்காசி, கோவில்பட்டி, விருதுநகர், சங்கரன்கோவில், தூத்துக்குடி, வாசுதேவநல்லூர் பகுதிகளை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேற்று கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்திற்கு வந்து ஒரு புகார் மனுவை கொடுத்தனர்.

அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- 

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் தங்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பி வைப்பதாக கூறி எங்களிடம் ரூ.45 ஆயிரம் பணம் கேட்டனர். நாங்கள் அவர்கள் கேட்ட பணத்தை அவர்கள் கொடுத்த வங்கி கணக்குக்கு அனுப்பி வைத்தோம், இதனையடுத்து நாங்கள் வெளிநாடு செல்வதற்காக அந்த நிறுவனம் மூலம் எங்களுக்கு விசா அனுப்பினார்கள். பின்னர் பாஸ்போர்ட்டு அனுப்பப்பட்டது. அந்த பாஸ்போர்ட்டில் அவர்கள் அனுப்பிய விசா பற்றி விவரங்கள் எதுவும் குறிப்பிடவில்லை, அதன் பிறகு தான் தெரிந்தது அது போலி விசா என்று. இதனையடுத்து நாங்கள் 15 பேரும் அந்த நிறுவனத்திற்கு சென்று பார்த்தபோது அந்த நிறுவனம் பூட்டப்பட்டு இருந்தது. அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று நடந்த சம்பவங்களை பற்றி துணை போலீஸ் சூப்பிரண்டிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.

1 More update

Next Story