அச்சரப்பாக்கத்தில் இலவச பொது மருத்துவ முகாம்


அச்சரப்பாக்கத்தில் இலவச பொது மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 23 Dec 2021 5:45 PM IST (Updated: 23 Dec 2021 5:45 PM IST)
t-max-icont-min-icon

அச்சரப்பாக்கத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இணைந்து நடத்திய மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சரப்பாக்கம் பேரூராட்சி் வெங்கடேசபுரம் அய்யனாரப்பன் கோவில் வளாகத்தில் ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம் மற்றும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இணைந்து நடத்திய மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் பொது மருத்துவம், பல் மருத்துவம், அறுவை சிகிச்சை மருத்துவம், குழந்தை நல மருத்துவம், கண் மருத்துவம், இயன்முறை மருத்துவம் போன்றவற்றுக்கு சிறப்பான சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரை, ஊசி முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டது.

முகாமில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வக்கீல் சீனிவாசன், முருகன், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம் விளம்பர குழுவின் என்ஜினீயர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பாக நடத்தினர்.

இதில் சமூகசேவகர் சரவணன், தமிழ்நாடு இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் தனசேகரன், எம்.ரமேஷ், தண்டலம் சுந்தர், மேல்மருவத்தூர் ஆஸ்பத்திரி ஒருங்கிணைப்பாளர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story