விவசாய தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்; சத்தியில் நடந்த மாநில கூட்டத்தில் தீர்மானம்

விவசாய தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று சத்தியமங்கலத்தில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சத்தியமங்கலம்
விவசாய தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று சத்தியமங்கலத்தில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநில கூட்டம்
சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில அளவிலான பொதுக்குழு கூட்டம் 2 நாட்கள் நடைபெற்றது. ேநற்று முன்தினம் நடந்த கூட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. பத்மாவதி தலைமை தாங்கினார். வி.பி.பழனிசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், புதுச்சேரி மாநில இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் ராமமூர்த்தி, சங்கத்தின் பொதுச்செயலாளர் பெரியசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம் மற்றும் மாவட்ட 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத் தொழிலாளர்கள் சங்க தலைவர் சி.கே.முருகன், மாநில குழு உறுப்பினர் மோகன் குமார் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
ஓய்வூதியம்
* சிறு, குறு விவசாயிகள் உள்பட விவசாயத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க சட்டம் இயற்ற வேண்டும்.
* விவசாய தொழிலாளர்கள் வாழ்க்கை நிலையை ஆய்வு செய்ய முத்தரப்பு பிரதிநிதிகள் கொண்ட உயர்மட்டக் குழு அமைக்க வேண்டும்.
* 1996-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி ஆட்சியில் அமைத்த விவசாய தொழிலாளர் நல வாரியம் அமைக்கப்பட வேண்டும்.
* வீடு இல்லாத ஏழை குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகள் கொண்ட வீடுகள் கட்டித்தர வேண்டும்.
மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story






