ஈரோட்டில் வாயில் கருப்பு துணி கட்டி ரெயில் என்ஜின் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில் வாயில் கருப்பு துணி கட்டி ரெயில் என்ஜின் டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஈரோடு
அகில இந்திய ரெயில் ஓட்டுனர்கள் சங்கம் சார்பில், ஈரோடு ரெயில் நிலையம் அருகில் உள்ள ரெயில் ஓட்டுனர்கள் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சேலம் கோட்ட செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். ஈரோடு கிளை செயலாளர் ஸ்ரீஜித் முன்னிலை வகித்தார். மத்திய ஒருங்கிணைப்பு செயலாளர் ரோலி கலந்து கொண்டு பேசினார்.
8 மணி நேரத்தில் 3 சரக்கு ரெயில்களை இயக்கி களைப்படைந்து, ஓய்வு கேட்ட ஈரோடு உதவி ரெயில் என்ஜின் டிரைவரான ஜித்துவை பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்தும், 8 மணி நேர பணியை உறுதி செய்ய வேண்டும் மற்றும் ரெயில் என்ஜின் டிரைவர் பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் ரெயில் என்ஜின் டிரைவர்கள் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
Related Tags :
Next Story






