தினத்தந்தி புகாா் பெட்டி

தினத்தந்தி புகாா் பெட்டி
குண்டும்-குழியுமான வீதி (படம்)
ஈரோடு கடை வீதியான பொன் வீதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த வீதியில் உள்ள பாதாள சாக்கடையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதனால் அந்த வீதியில் வாகனங்களில் ெசல்ல முடியவில்லை. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் குண்டும்- குழியுமான வீதியை சீரமைக்க வேண்டும்.
இளங்கோ, ஈரோடு.
குவிந்து கிடக்கும் குப்பை
ஈரோடு ரெயில் நிலையம் சரக்கு பணிமனை செல்லும் வழியில் பலர் குப்பைகளை போட்டுவிட்டு சென்று விடுகிறார்கள். இதனால் குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கிறது. இதன்காரணமாக அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், பல்வேறு தொற்று நோய்கள் பரவவும் வாய்ப்பு உள்ளது. மேலும் காற்று அடிக்கும் போது அதில் இருந்து குப்பை பறந்து ரெயில் நிலையத்திற்குள் வந்து விடுகிறது. எனவே சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் இந்த குப்பைகளை அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அருள்மொழி, ஈரோடு.
எரியாத தெருவிளக்கு
ஈரோடு வீரப்பன்சத்திரம் முனியப்பசாமி கோவில் ரோட்டில் 2 தெரு விளக்குகள் எரியாமல் உள்ளது. இதன்காரணமாக அந்த பகுதி இருளில் மூழ்கி உள்ளது. ஆகவே மின் கம்பத்தில் மின் விளக்குகளை எரிய செய்ய மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சந்திரன், ஈரோடு.
பாதியில் நிற்கும் வடிகால் பணி
அந்தியூர் புதுப்பாளையம் குருநாதசாமி கோவில் அருகே சாக்கடை வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. ஆனால் என்ன காரணத்தினாலோ சாக்கடை வடிகால் கட்டும் பணி கடந்த ஒரு ஆண்டாக நடைபெறவில்லை. அந்த பணி பாதியிலேயே நிற்கிறது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் கடந்து செல்ல முடியவில்லை போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே பாதியில் நின்ற சாக்கடை வடிகால் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அருள், புதுப்பாளையம்.
ரோட்டில் பறக்கும் புழுதி
ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா சாலை குண்டும் குழியுமாக இருந்த நிலையில், அந்த குழியில் ஜல்லியை கொட்டிவிட்டு சென்றனர். இதன்காரணமாக அந்த ரோட்டில் புழுதி ஏற்பட்டு காற்றில் பறக்கிறது. இதனால் அந்த பகுதியில் வாகனங்களில் செல்ல முடிவதில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த சாலையை சரி செய்ய வேண்டும்.
பொதுமக்கள், ஈரோடு.
Related Tags :
Next Story






