கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து விழிப்புணர்வு


கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து விழிப்புணர்வு
x
தினத்தந்தி 24 Dec 2021 10:22 PM IST (Updated: 24 Dec 2021 10:22 PM IST)
t-max-icont-min-icon

கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து விழிப்புணர்வு


கோவை

கோவை சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த தேவராஜ், தனது பேரன் முகுந்தனுடன் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். 

அவர்கள், சுற்றுச்சூழ லை பாதுகாக்கும் வாசகங்கள் அடங்கிய அட்டைகளையும், மஞ்சப்பைகளையும் கைகளில் வைத்துக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


இதுகுறித்து தேவராஜ் கூறுகையில், 

தமிழக முதல்-அமைச்சரின் மஞ்சப்பை திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மஞ்சப் பைகளை எடுத்து வந்துள்ளோம். பேச்சளவில் இல்லாமல் பிளாஸ்டிக்கை தவிர்த்து அனைவரும் மஞ்சப்பை பயன்பாட்டுக்கு மாற வேண்டும்.  

அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மஞ்சப்பைகளை எடுத்து வந்தோம். அதை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறேன் என்றார்.‌ 


இதைதொடர்ந்து அவர்கள், கோவை அரசு மருத்துவமனை பகுதிக்கு சென்று, மஞ்சப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

1 More update

Next Story