சேலம் கோட்டத்துடன் இணைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்


சேலம் கோட்டத்துடன் இணைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Dec 2021 10:33 PM IST (Updated: 24 Dec 2021 10:33 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ரெயில் நிலையங்களை சேலம் கோட்டத்துடன் இணைக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலும் கடைகளில் கருப்பு கொடி கட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிணத்துக்கடவு

பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ரெயில் நிலையங்களை சேலம் கோட்டத்துடன் இணைக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலும் கடைகளில் கருப்பு கொடி கட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ஆகிய ரெயில் நிலையங்களை பாலக்காடு கோட்டத்தில் இருந்து பிரித்து, சேலம் கோட்டத்துடன் இணைக்கக்கோரி ரெயில்வே பயணிகள் நலச்சங்கத்தினர், வியாபாரிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கிணத்துக்கடவு ஆர்.எஸ். ரோட்டில் உள்ள தபால் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டவர்கள் கூறியதாவது:-

அடிப்படை வதிகள்

கோவையில் இருந்து கிணத்துக்கடவு வழியாக ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த ராமேசுவரம், திண்டுக்கல், தூத்துக்குடி, தென்காசி ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டும். மேட்டுப்பாளையத்தில் இருந்து கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வழியாக மதுரை, திருச்செந்தூர் போன்ற தென்மாவட்டங்களுக்கு புதிய ரெயல்களை(இண்டர்சிட்டி) இயக்க வேண்டும். கிணத்துக்கடவு ரெயில் நிலையத்தில் முன்பதிவு கவுண்ட்டர், நடை மேம்பாலம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

கடைகளில் கருப்பு கொடி

இதில் அரசியல் கட்சியினர் உள்பட அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். முன்னதாக கிணத்துக்கடவு மெயின்ரோடு, ஆர்.எஸ்.ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கடைகளின் முன்பு கருப்பு கொடி கட்டப்பட்டது. இதனால் கிணத்துக்கடவு பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

1 More update

Next Story