ஈரோட்டில் பெரியார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை


ஈரோட்டில் பெரியார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 25 Dec 2021 2:33 AM IST (Updated: 25 Dec 2021 2:33 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் பெரியார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

ஈரோடு
ஈரோட்டில் பெரியார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
நினைவு தினம்
பெரியார் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு சார்பில், பெரியார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு எஸ்.சி. பிரிவு மாவட்ட தலைவர் கே.பி.சின்னுசாமி தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் குளம் ராஜேந்திரன், வக்கீல் பிரிவு செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ஜெ.சுரேஷ் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் வக்கீல் பிரிவு மாவட்ட தலைவர் பிரகாஷ், நிர்வாகிகள் கார்த்தி, முத்துராஜா, கிருபாகரன், ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
பொல்லான் பேரவை
இதேபோல் அருந்ததியர் இளைஞர் பேரவை மற்றும் மாவீரன் பொல்லான் பேரவை சார்பில் அதன் தலைவர் என்.ஆர்.வடிவேல் ராமன், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் பொதுச்செயலாளர்கள் ஆறுமுகம், சண்முகம், ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் சதீஸ் பாபு, தலித் விடுதலை இயக்க மாவட்ட செயலாளர் பொன் சுந்தரம், தலித் விடுதலை கட்சி மாநில அமைப்பாளர் ஆறுமுகம், அருந்ததியர் விடுதலை இயக்க தலைவர் சாமிநாதன், மதுரைவீரன் மக்கள் விடுதலை இயக்க தலைவர் ஆறுமுகம், மாவட்ட தலைவர் அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
1 More update

Next Story