அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது

அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது
கோவை
மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய கோவை அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கணினி ஆசிரியர்
கோவை வெள்ளலூரில் உள்ள அரசு பள்ளியில் கணினி ஆசிரியராக விஜய் ஆனந்த் (வயது 41) என்பவர் பணியாற்றி வந்தார்.
இவர், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பள்ளியில் படிக்கும் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவிகளுக்கு வாட்ஸ்- அப்பில் ஆபாச குறுந்தகவல்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்பியதாக தெரிகிறது.
எனவே சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட மாணவிகள் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர்.
ஆபாச குறுஞ்செய்தி
இந்த நிலையில் ஆசிரியர் விஜய் ஆனந்த் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி மாண வர்கள் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை அறிந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கீதா மற்றும் போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மாணவிகள், கணினி ஆசிரியர் விஜய் ஆனந்த், மாணவிகளின் உடலை தொட்டு பேசுவது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், மாணவிகளின் செல்போன் எண்ணுக்கு வீடியோ கால் செய்து டீ-சர்ட் போடுங்கள் என்றும்,
வாட்ஸ் அப்பில் ஆபாச குறுந்தகவல்கள், புகைப்படங்களையும் அனுப்பி தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறினர். மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவிகள் கோரிக்கை வைத்தனர்.
போக்சோவில் கைது
இதையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கீதா, மாணவிக ளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய கணினி ஆசிரியர் விஜய் ஆனந்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதற்கிடையே கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசில் மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில்,
மாணவிகளுக்கு வாட்ஸ்- அப்பில் ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பி தொல்லை கொடுத்த ஆசிரியர் விஜய் ஆனந்த் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
அவரை நேற்று காலை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story






