தங்கத்தில் மஞ்சப்பைகள் செய்து விழிப்புணர்வு


தங்கத்தில் மஞ்சப்பைகள் செய்து விழிப்புணர்வு
x
தினத்தந்தி 25 Dec 2021 7:22 PM IST (Updated: 25 Dec 2021 7:22 PM IST)
t-max-icont-min-icon

தங்கத்தில் மஞ்சப்பைகள் செய்து விழிப்புணர்வு


கோவை

கோவை செட்டிவீதி அசோக் நகரை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் மஞ்சப்பை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுவதற்காக,


 தனது நகை பட்டறையில் 200 மற்றும் 500 மில்லி கிராம் எடை தங்கத்தில் 10 மஞ்சப்பைகளை வடிவமைத்தார். 

அவர், தங்கத்தில் செய்த மஞ்சப்பைகளை கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு வந்து பொதுமக்களிடம் காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இது குறித்து நகைபட்டறை உரிமையாளர் மாரியப்பன் கூறுகையில், சுற்றுச்சூழலை மேம்படுத்த மஞ்சப்பை பயன்பாட்டை முதல்- அமைச் சர் தொடங்கி வைத்துள்ளார். 

எனவே மஞ்சப்பை குறித்து பொதுமக்க ளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தங்கத் தில் 10 மஞ்சப்பைகளை வடிவமைத்தேன். 

அதில், மீண்டும் மஞ்சப்பை, பிளாஸ்டிக்குக்கு குட்பை என்ற வாசகத்தை எழுதியுள்ளேன். இதுபோல் தேவைப்படுபவர்களுக்கு செய்து கொடுக்கவும் தயாராகவும் உள்ளேன் என்றார்.

1 More update

Next Story