50 அடி பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டு வாலிபர் படுகாயம்

50 அடி பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டு வாலிபர் படுகாயம்
வால்பாறை
ஆனைமலையில் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களில் வால்பாறைக்கு 3 வாலிபர்கள் சுற்றுலா வந்தனர். கவர்க்கல் எஸ்டேட் பகுதியில் பூபதி(வயது 29) என்ற வாலிபர் தனியாக ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திடீரென சாலையோர தடுப்பில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு 50 அடி பள்ளத்தில் அவர் விழுந்தார். மேலும் படுகாயம் அடைந்து வலியால் அலறித்துடித்தார். சத்தம் கேட்டு அருகில் வசிக்கும் எஸ்டேட் தொழிலாளர்கள் ஓடி வந்து அவரை மீட்டு தூக்கி வந்து ஆம்புலன்ஸ் மூலம் வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவரது கால் எலும்பு முறிந்து இருந்தது. இதனால் பூபதி பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அவர் மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டியதே விபத்துக்கு காரணம் என்று எஸ்டேட் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story






