2 மாதங்களுக்கு பிறகு, நாளை முதல் கொடிவேரி அணையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி; பொதுப்பணித்துறை அறிவிப்பு


2 மாதங்களுக்கு பிறகு, நாளை முதல் கொடிவேரி அணையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி; பொதுப்பணித்துறை அறிவிப்பு
x
தினத்தந்தி 26 Dec 2021 2:26 AM IST (Updated: 26 Dec 2021 2:26 AM IST)
t-max-icont-min-icon

கடந்த 2 மாதங்களுக்கு பிறகு கொடிவேரி அணையில் நாளை (திங்கட்கிழமை) முதல் குளிக்கலாம் என பொதுப்பணித்துறை அறிவித்து உள்ளது.

கடத்தூர்
கடந்த 2 மாதங்களுக்கு பிறகு கொடிவேரி அணையில் நாளை (திங்கட்கிழமை) முதல் குளிக்கலாம் என பொதுப்பணித்துறை அறிவித்து உள்ளது. 
கொடிவேரி அணை
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொடிவேரியில் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு  உள்ளது. இங்குள்ள தடுப்பணையில் அருவி போல் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். 
இதனால் ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்வர். மேலும் தாங்கள் கொண்டு வந்த உணவு பதார்த்தங்களை அங்குள்ள பூங்காக்களில் வைத்து சாப்பிட்டும், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கொடுத்தும் மகிழ்வார்கள். குறிப்பாக சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். 
தடை 
கடந்த 2 மாதமாக பவானிசாகர் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையில் இருந்து உபரிநீர் பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. இதன்காரணமாக கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டது. 
அனுமதி
இந்த தடை கடந்த 2 மாதமாக நீடித்து வந்தது. 
இந்த நிலையில் வருகிற 27-ந் தேதி (அதாவது நாளை திங்கட்கிழமை) முதல் சுற்றுலா பயணிகள் குளிக்கலாம் என பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்து உள்ளது.
1 More update

Next Story