தினத்தந்தி புகாா் பெட்டி


தினத்தந்தி புகாா் பெட்டி
x
தினத்தந்தி 26 Dec 2021 2:46 AM IST (Updated: 26 Dec 2021 2:46 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகாா் பெட்டி

வீணாகும் குடிநீர் (படம்)
கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து காங்ேகயம் பகுதிக்கு செல்லும் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் வெளியேறி வீணாக காங்கேயம் ரோட்டில் ஓடுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  குழாய் உடைப்பை உடனே சரிசெய்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.,
சுந்தரமூர்த்தி, கொடுமுடி.

தேங்கி நிற்கும் கழிவுநீர்
ஈரோடு ராஜீவ் நகர் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்பு உள்ளது. உடனே சாக்கடை அடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ராஜீவ்நகர்.
  
சுத்தம் செய்யப்படுமா?
ஈரோடு மாநகராட்சி பெரியசேமூர் ஊராட்சி மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் எப்31 முதல் 36 வரையிலான பிளாக்கில் சாக்கடை கால்வாய் கடந்த 3 மாதங்களாக சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. உடனே சாக்கடையில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்ற அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.
வி.கணேஷ்பாண்டியன், மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட்.

ரோட்டில் உடைக்கப்படும் மதுபாட்டில்கள்
சிவகிரியில் இருந்து முத்தூர் செல்லும் ரோட்டில் ரங்கசமுத்திரம் என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள மெயின் ரோட்டில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடைக்கு வரும் மது பிரியர்கள் தினமும் மது குடித்துவிட்டு அங்குள்ள பாட்டில்களை ரோட்டின் முகப்பு பகுதியிலேயே வீசிவிட்டு சென்றுவிடுகின்றனர். இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களின் டயர்களை உடைந்த பாட்டில் துண்டுகள் பதம் பார்த்து விடுகிறது. இதனால் டயர் பஞ்சராகி வாகன ஓட்டிகள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே மது பிரியர்கள் ரோட்டின் பகுதியில் மது பாட்டில்களை உடைப்பதை தடுக்க நடவடிக்கை எடுப்பதுடன், உடைந்து கிடக்கும் கண்ணாடி பாட்டில், பிளாஸ்டிக் டம்ளர் ஆகியவற்றை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சிவகிரி.

மின் கம்பத்தை சுற்றி செடிகள்
அரசூரில் ஒரு வீதியில் 60 அடி உயர மின் கம்பம் உள்ளது. இந்த மின் கம்பத்தில் மின் விளக்கை அணைப்பதற்காக அதில் ஒரு சுவிட்ச் பெட்டி உள்ளது. அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இரவில் அந்த சுவிட்சை ஆன் செய்வர். பின்னர் பகலில் அதை அணைத்து விடுவார்கள். தற்போது அந்த மின் விளக்கை சுற்றி செடிகள் வளர்ந்து காணப்படுவதால் மிகவும் காலதாமதமாக அணைக்கிறார்கள். இதனால் மின்சார விரயம் ஏற்படுகிறது. எனவே மின் கம்பத்தை சுற்றி வளர்ந்து உள்ள செடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், அரசூர்.

சாக்கடையை தூர்வார வேண்டும்
ஈரோடு கிருஷ்ணம்பாளையம் திருநகர் காலனி பகுதியில் இருக்கும் ஒரு கோவிலின் பின்புறம் உள்ள பகுதியில் சாக்கடை கால்வாயில் கழிவுகள் தேங்கி கிடக்கின்றன. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. எனவே சாக்கடையை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சதீஸ் கமல், கிருஷ்ணம்பாளையம்.

குவிந்து கிடக்கும் குப்பைகள்
கோபி அருகே உள்ள நஞ்சகவுண்டம்பாளையத்தில் இருந்து கணக்கம்பாளையம் கள்ளிப்பட்டி வரை ரோடு செல்கிறது. இந்த ரோட்டில் புதுக்காடு என்னும் இடத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரோட்டில் குவிந்து உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், கோபி. 
1 More update

Next Story