சிக்னல்களில் கேமராக்களை பழுது நீக்கும் பணி

காட்சிகள் தெளிவாக பதிவாகாததால் சிக்னல்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பழுது நீக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கோவை
காட்சிகள் தெளிவாக பதிவாகாததால் சிக்னல்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பழுது நீக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சிக்னல்களில் கண்காணிப்பு கேமரா
கோவை மாநகர பகுதியில் முக்கிய சாலை சந்திப்புகளில் சிக்னல்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கு போக்குவரத்து விதிகளை மீறுபவர்க ளை கண்டறிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அவை, கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு உள்ளது. அதை சுழற்சி அடிப்படையில் 24 மணி நேரமும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கோவை அவினாசி சாலையில் எல்.ஐ.சி., அண்ணா சிலை, லட்சுமி மில் உள்ளிட்ட சிக்னல்களில் பொருத்தப்பட்டுள்ள சில கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்தன. அவற்றை பழுது பார்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பழுது நீக்கும் பணி
இது குறித்து கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கோவை மேற்கு மற்றும் கிழக்கு பகுதியில் தலா 28 சிக்னல்கள் உள்ளன. அவற்றில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. இதில் கோவை அவினாசி ரோட்டில் எல்.ஐ.சி., அண்ணா சிலை, லட்சுமி மில் உள்பட 5 சிக்னல்களில் உள்ள கண்கா ணிப்பு கேமராக்கள் வெயில் மற்றும் மழையில் நனைந்து பழுதாகியதால் காட்சிகள் தெளிவாக தெரியாத நிலை இருந்தது.
எனவே அவற்றை பராமரிக்கும் தனியார் நிறுவனத்தினர், இரவு நேரத்தில் சிக்னல் கேமராக்களை மடிக்கணினியுடன் இணைத்து காட்சிகள் தெளிவாக பதிவாகிறதா? என்று பார்த்தனர். இதுதவிர கண்காணிப்பு கேமராக்களில் இருந்த மற்ற பழுதுகளையும் சரி செய்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story






