டெங்கு காய்ச்சல் பாதித்த 28 பேர் அனுமதி


டெங்கு காய்ச்சல் பாதித்த 28 பேர் அனுமதி
x
தினத்தந்தி 26 Dec 2021 10:26 PM IST (Updated: 26 Dec 2021 10:26 PM IST)
t-max-icont-min-icon

கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சல் பாதித்த 28 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

கோவை

கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சல் பாதித்த 28 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

டெங்கு காய்ச்சல்

கோவை மாவட்டத்தில் கடந்த மாதம் தொடர்ந்து மழை பெய்தது.  தற்போது இரவு நேரங்களில் கடும் பனிப்பொழிவும், பகல் நேரங்களில் வெயிலும் நிலவி வருகிறது. இதன்காரணமாக டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து உள்ளது.எனவே கோவையில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்ட சுகாதாரத்துறை, மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கை கள் மேற்கொண்டு வருகிறது. 

அந்த வகையில், கோவை காந்திபுரம், சித்தாபுதூர், பாப்பநாயக்கன்பாளையம், ரேஸ்கோர்ஸ், ராமநாதபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதற்காக அந்த பகுதிகளில் தூய்மை பணி செய்து பணியாளர்கள் பிளீச்சிங் பவுடர் தூவினர்.

28 பேர் அனுமதி

ஆனாலும் கோவையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறையாமல் உள்ளது. டெங்கு காய்ச்சல் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.அங்கு தற்போது டெங்கு காய்ச்சல் பாதித்த கோவையை சேர்ந்த 21 பேர், மற்ற மாவட்டங்கைள சேர்ந்த 7 பேர் என மொத்தம் 28 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

அதில் 15 குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் பாதிப்புடன் தினசரி 100-க்கும் மேற்பட்டவர்கள் வந்து வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்வதாக அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா தெரிவித்தார்.

1 More update

Next Story