விலைவாசி உயர்வால் பாதிப்பு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்; இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் பேட்டி


விலைவாசி உயர்வால் பாதிப்பு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்; இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் பேட்டி
x
தினத்தந்தி 27 Dec 2021 2:16 AM IST (Updated: 27 Dec 2021 2:16 AM IST)
t-max-icont-min-icon

விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டு உள்ள பொதுமக்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்து உள்ளார்.

கடத்தூர்
விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டு உள்ள பொதுமக்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்து உள்ளார். 
பேட்டி
கோபி அருகே உள்ள பாரியூர் கொண்டத்து காளியம்மன் திருவிழா குறித்து தொண்டர்களுடன் ஆலோசனை மேற்கொள்வதற்காக கோபிக்கு இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கோபி பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு குண்டம் மிதிக்கவும், தேரோட்டம், மற்றும் மலர் பல்லக்கு ஆகியவற்றை நடத்தவும் மாவட்ட நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறை அனுமதி அளிக்க வேண்டும். மேலும் தைப்பூசம், தை அமாவாசை போன்ற விழாக்களுக்காக பக்தர்களுக்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும். தடைகள் விதிக்கக்கூடாது. 
தடை
ஆங்கில புத்தாண்டு என்கிற பெயரில் மெரினா கடற்கரை, பொது இடங்கள், சுற்றுலா தலங்களில் கலாசார பண்பாட்டை சீரழிக்கும் வகையில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும். 
ஏற்கனவே இதற்கு அரசு தடை விதித்திருக்கிறது என்றாலும், சில தனியார் விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் குறித்து அறிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கும் தடை விதிக்க வேண்டும்.
ரூ.5 ஆயிரம்
தமிழ்நாட்டில் அரசாங்கமே மதுக்கடைகளை நடத்துகிறது, எனவே மதுக்கடைகளை மூடும் போராட்டத்தை ஒவ்வொரு ஆண்டும் இந்து மக்கள் கட்சி நடத்தி வருகிறது, மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும். விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். தி.மு.க.வுக்கு மக்கள் நல்ல வாய்ப்பை அளித்து உள்ளனர். ஆகவே ஒரு நல்ல ஆட்சியை மக்களுக்கு தி.மு.க. கொடுக்க வேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார். 
1 More update

Next Story