உத்திரமேரூர் அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலி

உத்திரமேரூர் அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
கூலித்தொழிலாளி
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் மைக்லேன்புரம் ஆர்.டி. தெருவை சேர்ந்தவர் அன்னப்பன் (வயது 48). கூலித்தொழிலாளி. காட்டுப்பாக்கத்தில் உள்ள இவரது உறவினர் இறந்து விட்டார்.
துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் வாலாஜாபாத்தில் இருந்து உத்திரமேரூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
சாவு
திருப்புலிவனம் அருகே சென்றபோது எதிரே வந்த டிராக்டரின் பின் சக்கரத்தில் சிக்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் முத்துசாமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Related Tags :
Next Story






