பொள்ளாச்சியில் தொடர் குற்றசெயல்களில் ஈடுபடுபவர்கள் கண்காணிப்பு

பொள்ளாச்சியில் தொடர் குற்றசெயல்களில் ஈடுபடுபவர்கள் கண்காணிப்பு
பொள்ளாச்சி
திருட்டு, வழிப்பறி, கொள்ளை மற்றும் குடிபோதையில் அடிக்கடி தகராறு செய்யும் நபர்கள், ரவுடிகள் குறித்த தகவல்கள் கொண்ட குற்ற பதிவேடு அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த பதிவேட்டில் உள்ள நபர்களை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் குற்ற பதிவேட்டில் உள்ள நபர்களை அழைத்து கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.
இதில் சப்-இன்ஸ்பெக்டர் கவுதம் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்த விவரங்கள் குற்ற பதிவேட்டில் பராமரிக்கப்படும். ஏதாவது குற்ற சம்பவங்கள் நடைபெற்றால் அவர்களை அழைத்து விசாரணை நடத்தப்படும்.
மேலும் அவர்களது நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். ஒராண்டிற்கு எந்தவித குற்ற செயலிலும் ஈடுபடவில்லை என்றால் அந்த பதிவேட்டில் இருந்து நீக்கம் செய்யப்படுவார்கள் என்றனர். இதேபோன்று பொள்ளாச்சி நகர கிழக்கு போலீஸ் நிலையத்திலும் கூட்டம் நடைபெற்றது.
Related Tags :
Next Story






