தமிழக சோதனைச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பு


தமிழக சோதனைச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 27 Dec 2021 9:36 PM IST (Updated: 27 Dec 2021 9:36 PM IST)
t-max-icont-min-icon

தமிழக சோதனைச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பு

பொள்ளாச்சி

கேரளாவில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிப்பு காரணமாக தமிழக சோதனைச்சாவடியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

கண்காணிப்பு தீவிரம்

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. இதற்கிடையில் அண்டை மாநிலமான கேரளாவில் பறவை காய்ச்சலை தொடர்ந்து ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தமிழக எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இதன்படி பொள்ளாச்சி அருகே உள்ள மீனாட்சிபுரம் சோதனைச்சாவடியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். கேரளாவில் இருந்து வருவோருக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? மற்றும் சளி, இருமல் உள்ளிட்ட வேறு ஏதாவது அறிகுறிகள் உள்ளதா? என்று பரிசோதனை செய்கின்றனர். 

மேலும் எந்தவித நோய் பாதிப்பும் இல்லை என்று சான்றிதழ் இருந்தால் மட்டுமே தமிழக பகுதிகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கொரோனா தடுப்பூசி

பொள்ளாச்சி அருகே மீனாட்சிபுரம், கோவிந்தாபுரம், நடுப்புணி, கோபாலபுரம், வீரப்பகவுண்டனூர், கோவிந்தனூர், ஜமீன்காளியாபுரம் உள்ளிட்ட சோதனைச்சாவடி தமிழக-கேரள எல்லையில் உள்ளன. இந்த நிலையில் தற்போது கேரளாவில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதால் சோதனைச்சாவடியில் மீண்டும் கண்காணிப்பு பணி பலப்படுத்தப்பட்டுள்ளது.

 சுகாதார ஆய்வாளர், செவிலியர்கள் கொண்ட மருத்துவ பணியாளர்கள் கண்காணிப்பில் ஈடுப்பட்டு உள்ளனர். இதையடுத்து கேரளாவில் இருந்து வரும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

 மேலும் கொரோனா தடுப்பூசி போட்டு இருப்பதற்கான சான்றிதழ் இல்லை என்றால் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். இதுவரைக்கும் பொள்ளாச்சி பகுதியில் ஒமைக்ரான் பாதிப்பு இல்லை. இருப்பினும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

பாதுகாப்பு வழிமுறைகள்

சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் பொதுமக்கள் உடனே அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரி அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மேலும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
1 More update

Next Story