பவானிசாகர் அருகே இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியல்

பவானிசாகர் அருகே இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பவானிசாகர்
பவானிசாகர் அருகே தொப்பம்பாளையத்தில் ஒரு மதத்தின் சார்பு வழிபாட்டுத்தலம் உள்ளது. இந்த வழிபாட்டுத் தலத்திற்கு கட்டிட அனுமதி கோரி கோர்ட்டில் வழக்கு நடந்து வருவதாக தெரிகிறது. இந்தநிலையில் இந்த வழிபாட்டு தலத்துக்கு கட்டிட அனுமதி கொடுக்க நேற்று காலை அதிகாரிகள் முயன்றதாக கூறி இந்து முன்னணியினர் மற்றும் பெண்கள் உள்பட ஏராளமானோர் நேற்று பகல் 11 மணி அளவில் பவானிசாகர்-புளியம்பட்டி சாலையில் ஒன்று திரண்டனர்.பின்னர் ரோட்டில் உட்கார்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் தாசில்தார் ரவிக்குமார் அங்கு சென்று இந்து முன்னணியைச் சேர்ந்த நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது இந்து முன்னணியினர் கூறும்போது, ‘இந்த கட்டிடத்தில் இரவு நேரத்தில் வழிபாடு நடத்துவதால் இப்பகுதி மக்களுக்கு தொந்தரவு ஏற்படுகிறது. எனவே வழிபாட்டு் தலத்துக்கு கட்டிட அனுமதி அளிக்கக்கூடாது.’ என்று கூறினர். அதற்கு தாசில்தார் கூறும்போது, ‘மாவட்ட நிர்வாகத்திடம் இது குறித்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை இங்கு வழிபாடு நடக்காது’ என உறுதி அளித்தார். அதை ஏற்றுக்கொண்ட இந்து முன்னணியினர் சாலை மறியலை கைவிட்டு் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனால் பவானிசாகர்-புளியம்பட்டி சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story






