கூகலூர் வாய்க்கால்புதூரில் 6 மாதங்களாக திறந்து கிடக்கும் ஆழ்குழாய் கிணறு- உடனே மூட பொதுமக்கள் கோரிக்கை


கூகலூர் வாய்க்கால்புதூரில் 6 மாதங்களாக திறந்து கிடக்கும் ஆழ்குழாய் கிணறு- உடனே மூட பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 28 Dec 2021 3:33 AM IST (Updated: 28 Dec 2021 3:33 AM IST)
t-max-icont-min-icon

கூகலூர் வாய்க்கால்புதூரில் கடந்தத 6 மாதங்களாக திறந்து கிடக்கும் ஆழ்குழாய் கிணறை உடனே மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கடத்தூர்
கோபி அருகே உள்ள கூகலூர் பேரூராட்சிக்கு உள்பட்டது வாய்க்கால் புதூர். இங்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டது. இதிலிருந்து வாய்க்கால்புதூர் உள்பட 3 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தண்ணீர் வற்றாததால் இதுவரை இந்த ஆழ்குழாய் கிணற்று தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இந்த ஆழ்குழாய் கிணற்றில் பொருத்தப்பட்டு இருந்த மின் மோட்டார் பழுது ஏற்பட்டது. இதனால் மின்மோட்டாரை பழுது பார்ப்பதற்காக பேரூராட்சி நிர்வாகம் எடுத்துச்சென்றது. அப்போது ஆழ்குழாய் கிணற்றில் இருந்து குழாய்களும் அகற்றப்பட்டு, மின் ஒயர்கள் துண்டிக்கப்பட்டது. ஆனால் ஆழ்குழாய் கிணறு மூடப்படவில்லை. திறந்த நிலையிலேயே கிடக்கிறது.
இந்த வழியாக பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் ஏராளமானோர் சென்று வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் கால்நடை மேய்ப்பவர்களும் அதிகமானோர் உள்ளனர்.
ஆழ்குழாய் கிணறு திறந்த நிலையில் உள்ளதாலும், மின்சார ஒயர்கள் துண்டிக்கப்பட்டதோடு அவற்றை பாதுகாப்பாக மூடாமல் வைத்து உள்ளதாலும், மாணவ-மாணவிகள் கவனிக்காமல் ஆழ்குழாய் கிணறு உள்ளே விழுந்து உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பேராபத்து ஏற்படும் முன்பு மின்மோட்டார் பழுதை சரிசெய்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அதுவரை ஆழ்குழாய் கிணற்றை மூடி வைக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 More update

Next Story