இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 28 Dec 2021 9:39 AM GMT (Updated: 2021-12-28T15:09:12+05:30)

சென்னையில் வெவ்வேறு பகுதிகளில் 2 இளம்பெண்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

செங்குன்றம்,

சென்னையை அடுத்த மாதவரம் பொன்னியம்மன் மேடு பிருந்தாவன் கார்டன் பகுதியை சேர்ந்தவர் பத்ரி(வயது 34). இவர், வியாசர்பாடியில் நகை கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி மஞ்சு தேவி(27). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன.

பத்ரி நகை கடைக்கு சென்று விட்டநிலையில் வீட்டில் தனியாக இருந்த மஞ்சு தேவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை ராஜீவ் காந்தி தெருவை சேர்ந்தவர் நரசிம்மன். இவருடைய மகள் சுகிதா (23). பி.காம் பட்டதாரியான இவர், வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து சுகிதாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story