திருப்போரூர் அருகே வேறு பகுதியை சேர்ந்தவர்களுக்கு நிலம் ஒதுக்க கிராம மக்கள் எதிர்ப்பு


திருப்போரூர் அருகே வேறு பகுதியை சேர்ந்தவர்களுக்கு நிலம் ஒதுக்க கிராம மக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 28 Dec 2021 5:35 PM IST (Updated: 28 Dec 2021 5:35 PM IST)
t-max-icont-min-icon

திருப்போரூர் அருகே வேறு பகுதியை சேர்ந்தவர்களுக்கு நிலம் ஒதுக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்போரூர்,

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே செம்பாக்கம் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களை பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து செம்பாக்கம் பகுதி மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. ஷாகிதா பர்வீன், தாசில்தார் ராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள், ஏற்கனவே அரசு சார்பில் 64 குடும்பத்தினருக்கு செம்பாக்கம் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் இடம் ஒதுக்கி வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பத்திரிகையாளர்களுக்கும் 3 சென்ட் இடம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மேலும் பல்வேறு இடங்களில் இருந்து வருபவர்களுக்கு அரசு இடம் ஒதுக்கி தர உள்ளதாக கூறப்படுகிறது.

அரசு புறம்போக்கு நிலங்களை எங்களுக்கும் வழங்க வேண்டும் என்று தாசில்தாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. ஷாகிதா பர்வீன், மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் திருப்போரூர் போலீசார் உதவியுடன் அந்த பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று சுமூக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்பகுதி மக்கள் கூறுகையில்:-

எங்கள் பகுதியில் உள்ள நிலங்களை முதலில் எங்களுக்கு கொடுப்பதற்கு அரசு முன் வரவேண்டும், செம்பாக்கம் பகுதியில் போதிய சுடுகாடு இல்லாமல் காலம் காலமாக அவதிப்பட்டு வருகிறோம்.

இளைஞர்கள் விளையாடுவதற்கு விளையாட்டுத் திடல் அமைத்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அரசு நிலத்தில் தங்குவதற்கு சமத்துவபுரம் அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். மேலும் தனியார் அடுக்குமாடி நிறுவனம் செங்கல்பட்டு சாலை செம்பாக்கம் பகுதியில் 20 ஏக்கர் அரசு நிலங்களை அபகரித்து மதில்சுவர் கட்டியுள்ளது. அதை மீட்டு தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஒரு வாரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றும் இங்கு சமத்துவபுரம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் உறுதிமொழி அளிக்கப்பட்டது.

3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
1 More update

Next Story