புளியமரத்துப்பாளையத்தில் பள்ளி மாணவனுக்கு டெங்கு காய்ச்சல்

புளியமரத்துப்பாளையத்தில் பள்ளி மாணவனுக்கு டெங்கு காய்ச்சல்
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை வட்டாரத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க சுகாதாரத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதுவரை பள்ளி மாணவர்கள் 3 பேர் உள்பட மொத்தம் 13 பேர் டெங்கு காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
இந்த நிலையில், நேற்று புளியமரத்துப்பாளையத்தில் 2-ம் வகுப்பு பள்ளி மாணவன் ஒருவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டான். இதனால் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
புளியமரத்துப்பாளையத்தில் மாணவன் பாதிக்கப்பட்டதையடுத்து அங்கு தண்ணீர் தொட்டிகளில் அபைட் கரைசல் தெளித்தல், கொசு மருந்து அடித்தல், நிலவேம்புகசாயம் வழங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
கொரோனா குறைந்து வரும் வேளையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வனிதா உத்தரவின்பேரில், சுகாதார துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு டெங்கு ஏற்படாமல் தடுக்கும் வகையில் தொடர்ந்து ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.
டெங்கு பரவலை தடுக்க வீட்டை சுற்றி சுகாதார பணிகள் மேற்கொள்ள பொதுமக்கள் மற்றும் பெற்றோர்களுக்கு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகதாஸ், ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில் அறிவுரையும் வழங்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story






