பழுதடைந்த அரசு குடியிருப்புகளை இடித்துவிட்டு புதிதாக கட்டப்படும்- அமைச்சர் சு.முத்துசாமி பேட்டி

பழுதடைந்த அரசு குடியிருப்புகளை இடித்துவிட்டு புதிதாக கட்டப்படும் என்று அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
மொடக்குறிச்சி
பழுதடைந்த அரசு குடியிருப்புகளை இடித்துவிட்டு புதிதாக கட்டப்படும் என்று அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
வீரம் போற்றப்படும்
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் அமைச்சர்கள் சு.முத்துசாமி, மதிவேந்தன் ஆகியோர் கலந்துகொண்டு பொல்லான் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அதன்பின்னர் அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் நினைவிடத்திற்கான இடம் விரைவில் தேர்வு செய்யப்படும். மாவீரன் பொல்லான், தீரன் சின்னமலையுடன் இணைந்து ஆங்கிலேயரை எதிர்த்து 3 பெரிய போர்களில் வெற்றி பெற்றவர். அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டு, ஆண்டுதோறும் அவரது வீரம் போற்றப்படும்.
புதிதாக கட்டப்படும்
வீட்டுவசதி வாரியம் மற்றும் நகர்ப்புற குடியிருப்பு மேம்பாட்டு வாரியம் தனித்தனியாக இயங்கி வருகிறது. இதில் எந்தெந்த கட்டிடங்கள் பழுதடைந்துள்ளது என்பது குறித்து புகார் வருவதை அடுத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோவை, சென்னை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட பல பகுதிகளில் கட்டிடங்கள் பழுதடைந்துள்ளது. 193 அரசு குடியிருப்புகளில் 60 இடங்களில் உள்ள கட்டிடங்கள் இடிந்து விழும் நிலையில் இருப்பதாக தகவல் வந்துள்ளது. இதனை முழுவதும் இடித்துவிட்டு புதிதாக கட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் தமிழக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வருவாய் இழப்பு
அதைத்தொடர்ந்து சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேட்டி அளித்தார். அப்போது அவர், 'ஈரோடு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அரசு கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு ஓட்டல்கள் ஆன்லைன் கட்டுப்பாட்டில் விட்டதன் மூலம் கடந்த 40 நாட்களில் மட்டும் ரூ.25 லட்சம் வருமானம் வந்துள்ளது.
தமிழ்நாடு ஓட்டல்கள் கடந்த 10 ஆண்டுகள் பராமரிப்பு இன்றி உள்ளது. இதனால் அரசுக்கு கோடிக்கணக்கில் வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது' என்றார்,
Related Tags :
Next Story






