பவானிசாகர் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்ற 3 பேர் கைது

பவானிசாகர் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கிவைத்து விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பவானிசாகர்
பவானிசாகர் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கிவைத்து விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தடைசெய்யப்பட்ட புகையிலை
பவானிசாகர் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பதாக பவானிசாகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பவானிசாகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையில் போலீசார் பவானிசாகர் மேட்டுப்பாளையம் ரோட்டில் நால்ரோடு பகுதியில் ரோந்து சென்றார்கள். அப்போது அங்கு சந்தேகப்படும்படி கையில் பையுடன் 3 பேர் நின்றுகொண்டு இருந்தார்கள். இதனால் போலீசார் அவர்கள் வைத்திருந்த பைகளை வாங்கி பார்த்தார்கள். அதில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களான குட்கா, பான்மசாலா, பதான் பாக்கு ஆகியவை 33 கிலோ இருந்தது.
3 பேர் கைது
இதனால் போலீசார் 3 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்கள் பவானிசாகர் நால்ரோட்டை சேர்ந்த கருப்புசாமி, ரவிக்குமார் மற்றும் பெத்திகுட்டையை சேர்ந்த மோகன்குமார் என்பதும், இவர்கள் கர்நாடக மாநிலத்தில் இருந்து தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்திவந்து, அவைகளை பதுக்கிவைத்து விற்பதும் தெரிந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் 3 பேரையும் கைது செய்து, அவர்கள் வைத்திருந்து 33 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தார்கள்.
Related Tags :
Next Story






