மாணவியை கடத்தி திருமணம் செய்ய முயன்ற டிரைவர் போக்சோவில் கைது


மாணவியை கடத்தி திருமணம் செய்ய முயன்ற டிரைவர் போக்சோவில் கைது
x
தினத்தந்தி 29 Dec 2021 10:04 PM IST (Updated: 29 Dec 2021 10:04 PM IST)
t-max-icont-min-icon

மாணவியை கடத்தி திருமணம் செய்ய முயன்ற டிரைவர் போக்சோவில் கைது

பொள்ளாச்சி

பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்ய முயன்ற டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பள்ளி மாணவி மாயம்

பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 26-ந்தேதி திடீரென்று காணாமல் போனதாக தெரிகிறது.

 இதுகுறித்து பெற்றோர் பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார், மாணவி மாயமானதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதில் ஆத்துப்பொள்ளாச்சியை சேர்ந்த டிரைவர் சந்தீப்குமார் (வயது 23) என்பவரும், சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளதும், இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளதும் தெரியவந்தது. பின்னர் 2 பேரும் செல்போன் மூலம் பேசி வந்தனர்.

போக்சோவில் டிரைவர் கைது 

இந்த நிலையில் சந்தீப்குமார் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்வதற்காக சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது. 
இதையடுத்து போலீசார், தீவிர விசாரணை நடத்தி சேலத்தில் பதுங்கியிருந்த சந்தீப்குமாரை கைது செய்து, பொள்ளாச்சிக்கு அழைத்து வந்தனர்.

பின்னர் அவர் மீது சிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயன்றதாக போக்சோவில் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். 
1 More update

Next Story